யினை யுடையாய்; காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம். ''இலங்கிழாய்'' என்பது ''இதற்கு நீ யாதும் பரியலை'' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும்
- மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ''நீப்ப'' என்பது,
''நீத்து'' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ்
பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. ''இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன''்,என்பதாம். உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். இதுவும் அது. இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன். ''உரன்'' என்பது ஆகுபெயர். ''அந்நசையான் உயிர் வாழாநின்றேன், அஃதில்லையாயின் இறந்துபடுவல்'', என்பதாம். கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறும்என் நெஞ்சு. இதுவும் அது. நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது. வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், ''கூடிய காமமொடு'' என்றாள், ''ஒடு'' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. ''அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்து படுவல்'', என்பதாம். காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்றோள் பசப்பு.தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது. |