திருக்குறள்
ஓலை எண் :   445

Zoom In NormalZoom Out

னும்    இவ்வளைகள்  முன்னே அறிந்தன. கருத்து நிகழ்ந்ததாகலின்,
''தணந்தமை'' என்றும், ''யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள்
மெலிந்தன''   என்பாள்,   அதனை  வளைமேலேற்றி,  அதுதன்னை
உணர்வு   உடைத்தாக்கியும்   கூறினாள்.  நெருநற்றுச்  சென்றார்எம்
காதலர்  யாமும் எழுநாளேம் மேனி பசந்து. இதுவும் அது. எம்காதலர்
பிரிந்து  போயினார்  நெருநற்றே; அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து
எழுநாள் உடையமாயினேம். ''நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு
துணியப்பட்டது'' என்பாள், ''நெருநற்றுச் சென்றார்'' என்றும்,  அதனை
ஐயுற்றுச்  செல்கின்றது  ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது
என்பாள்.   ''மேனி   பசந்து   எழுநாளேம்''   என்றும்   கூறினாள்.
இவ்வாற்றான்  தலைமகனது  பிரிதற்  குறிப்பினை உணர்த்தி நின்றது.
தொடிநோக்கி   மென்தோளும்   நோக்கி   அடிநோக்கி   அஃதாண்
டவள்செய்   தது.   தலைமகள்   குறிப்பறிந்த   தோழி   அதனைத்
தலைமகற்கு  அறிவித்தது.  யான்  அது  தெளிவித்த வழி தெளியாது
அவர்   பிரிய   யான்  ஈண்டிருப்பின்  இவை  நில்லா  எனத்  தன்
தொடியை  நோக்கி;  அதற்கு  ஏதுவாக  இவை மெலியும் எனத் தன்
மென்தோள்களையும்  நோக்கி;  பின்  இவ்விரண்டும்  நிகழாமல்  நீர்
நடந்து  காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி;  ஆண்டு
அவள்   செய்தது   அங்ஙனம்   அவள்   செய்த   குறிப்பு  உடன்
போக்காயிருந்தது. செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. ''அஃது''
என்றாள்,     ''செறிதொடி     செய்திறந்த     கள்ளம்''      குறள்.
1275என்றானாகலின்.   பிரிதற்குறிப்புண்டாயின்,  அஃது  அழுங்குதல்
பயன்.   பெண்ணினால்   பெண்மை   உடைத்தென்ப   கண்ணினால்
காமநோய்  சொல்லி  இரவு.  தலைமகன்  பிரியாமைக்  குறிப்பினைத்
தோழிக்கு அறிவுறுத்தது. மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும்
வாயாற்சொல்லாது  கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று
அவரை  இரவாது  உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்;
தமக்கு  இயல்பாகிய  பெண்மை  மேலும்  ஒரு  பெண்மை உடைத்து
என்று  சொல்லுவர்  அறிந்தோர். தலைமகளது உடன் போதல் துணிபு
தோழியால் தெளிந்தானாகலின்,