திருக்குறள்
ஓலை எண் :   446

Zoom In NormalZoom Out

தன்     பிரிவின்மைக்    குறிப்பினை    அறிவுறுப்பான்,   அவள்
பெண்மையினைப்  பிறர்மேலிட்டு  வியந்து  கூறியவாறு.  அஃதாவது,
தலைமகனும்  தலைமகளும்  புணர்ச்சிக்கண்ணே  விரைதல்.    மேற்
புணர்ச்சி  மிகுதிபற்றித்  தலைமகன்  பிரிதற்  குறிப்பு  அறிவுறுத்தத்
தலைமகள்,  அவன்  மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் பின்னும்
தன்கண்ணே   நிகழ்தலான்.    இது  குறிப்பு  அறிவுறுத்தலின்  பின்
வைக்கப்பட்டது.  உள்ளக்  களித்தலும் காண  மகிழ்தலும் கள்ளுக்கில்
காமத்திற் குண்டு. பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக்
காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
நினைந்த   துணையானே   களிப்பெய்தலும்;   கண்ட  துணையானே
மகிழ்வெய்தலும்;   கள்ளுண்டார்க்கு  இல்லை,  காமம்  உடையார்க்கு
உண்டு.  களித்தல்  -  உணர்வழியாதது.  மகிழ்தல்  -  அஃதழிந்தது,
இவ்விரண்டும்   உண்டுழியல்லது   இன்மையின்   ''கள்ளுக்கு  இல''்
என்றாள்.  ''உண்டு'' என்பது இறுதி விளக்கு. ''அப்பெற்றித்தாய காமம்
உடையான்  புலத்தல்  யாண்டையது''  என்பதாம். தினைத்துணையும்
ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். இதுவும்
அது.   மகளிர்க்குக்  காமம்  பனையளவினும்  மிக  உண்டாமாயின்;
அவரால்,   தம்   காதலரோடு  தினையளவும்  ஊடுதல்  செய்யாமை
வேண்டப்படும். ''பனைத்துணையும்'' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால்
தொக்கது.  ஊடின்  வருத்தமிகும்  எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான்
போன்று,  தன் விதுப்புக் கூறியவாறு. பேணாது பெட்பவே செய்யினும்
கொண்கனைக்   காணா   தமையல   கண்.  இதுவும் அது.  நம்மை
அவமதித்துத்   தான்   செய்ய   வேண்டியனவே    செய்யுமாயினும்;
கொண்கனை என்  கண்கள்  காணாது  அமைகின்றன  இல்லை. தன்
விதுப்புக்  கண்கள்மேல் ஏற்றப்பட்டது. ''அத்தன்மையேன் அவனோடு
புலக்குமாறு என்னை''?   என்பதாம். ஊடற்கண் சென்றேன்மன் தோழி
அதுமறந்து  கூடற்கண்  சென்றதென்  நெஞ்சு.  இதுவும் அது. தோழி;
காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து
யான் அவரோடு ஊடுதற்