ங்ஙனம் ஊடற்கண் நீடாள்'' என்பது பயன். அஃதாவது, காரணம் உண்டாய வழியும் புலக்கக் கருதாது, புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும்,தலைமகன் புலத்தலும் ஆம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக் காகா தது. தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. நெஞ்சே; அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. ''ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை'' என்பதாம். உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு. இதுவும் அது. என் நெஞ்சே; மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ? ''அவரை'' என்பது வேற்றுமை மயக்கம் ''பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ''? என்பதாம். கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல். இதுவும் அது. நெஞ்சே; என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறு |