திருக்குறள்
ஓலை எண் :   450

Zoom In NormalZoom Out

வாயாக.     ''என்னை  விட்டு  அவர்மாட்டுச்  சேறல்  நீ  பண்டே
பயின்றது'',  என்பாள்,  ''பெட்டாங்கு''  என்றும்,  தான்  இதுபொழுது
மானமிலளாகலின்,  ''கெட்டார்க்கு'' என்றும் கூறினாள். ''பின்'' என்பது
ஈண்டு  இடப்  பொருட்டு. ''செலல்'' என்பது ஆகுபெயர். ''ஒல்கிடத்து
உலப்பிலா  உணர்விலார்  தொடர்பு''  கலித்,பாலை  25ஆயிற்று, நின்
தொடர்பு  என்பதாம்.  இனிஅன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. இதுவும் அது. நெஞ்சே; நீ அவரைக்
கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி,
முன்   புலவியை  உண்டாக்கி  அதனை  அளவறிந்து  பின்  நுகரக்
கருதாய்;   ஆகலான்,   இனி   அப்பெற்றிப்பட்டவற்றை  நின்னொடு
எண்ணுவார்  யார்?  யான்  அது  செய்யேன். அப்பெற்றிப்பட்டன -
புலக்கும்  திறங்கள்.  ''காண''  என்பது  உரையசை.  ''மற்று''  வினை
மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின்
புணர்ச்சி  விதும்பலின்,  இவ்வாறு  கூறினாள்.  பெறாஅமை அஞ்சும்
பெறின்பிரி  வஞ்சும்  அறாஅ  இடும்பைத்தென்  நெஞ்சு. வாயிலாகச்
சென்ற  தோழி  கேட்பத் தலைமகள் சொல்லியது. காதலரைப் பெறாத
ஞான்று  அப்பெறாமைக்கு  அஞ்சாநின்றது;  பெற்றக்கால்  வரக்கடவ
பிரிவினை  உட்கொண்டு  அதற்கு  அஞ்சா  நின்றது; ஆகலான், என்
நெஞ்சம்   எஞ்ஞான்றும்   நீங்காத   இடும்பையை  உடைத்தாயிற்று.
காதலரைப்  பெற்று  வைத்துக் கலவியிழத்தல்  உறுதியன்று  என்னும்
கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், ''பெறாமை அஞ்சும்''  என்றும்,
''கலவி  ஆராமையின்  இன்னும் இவர் பிரிவாராயின் யாது  செய்தும்''
என்பது    நிகழ்தலின்,    ''பெறின்    பிரிவு   அஞ்சும்''   என்றும்,
இவ்விரண்டுமல்லது   பிறிது    இன்மையின்,   ''எஞ்ஞான்றும்  அறா
இடும்பைத்து''  என்றும்  கூறினாள்.  தனியே  இருந்து நினைத்தக்கால்
என்னைத் தினிய இரு