ந்ததென் நெஞ்சு. இதுவும் அது. என் நெஞ்சு ஈண்டு இருந்தது; காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ''என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று'' என்பதாம். நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சில் பட்டு. இதுவும் அது. தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், ''கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்'', என்றாள். எள்ளின் இளிவாம்என் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. இதுவும் அது. உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறத்தினையே நினையாநின்றது. எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம். துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி. உணர்ப்புவயின் வாரா |