திருக்குறள்
ஓலை எண் :   453

Zoom In NormalZoom Out

புலவி     கலவி  இன்பம்  செயற்கு  வேண்டுமளவிற்றாதல்  உப்புத்
துய்ப்பனவற்றை  இன்சுவையாக்கற்கு  வேண்டுமளவிற்றாதல் போலும்;
இனி  அதனை  அவ்வளவில்  சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின்
மிக்காற்போலும்.  நீள விடல் - அளவறிந்துணராது கலவிமேல் எழுந்த
குறிப்பழுங்குமளவும்  செய்தல்.  ''சிறிது  நீள  விடலாகாது'' என்றாள்,
நேர்விக்கின்றாளாகலின்.     ''உப்பு     மிக்க    வழித்   துய்ப்பது
சுவையின்றானாற்  போலப்  புலவி மிக்கவழிக் கலவி இன்ப மின்றாம்''
என்றமையின்,   இது  பண்பு  உவமை.  அலந்தாரை  அல்லல்நோய்
செய்தற்றால்   தம்மைப்   புலந்தாரைப்  புல்லா  விடல்.  பரத்தையர்
இடத்துநின்றும்  வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.
தம்மைப்  பெறாது  புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர்
சேறல்;  பண்டே  துன்பமுற்று  அழிந்தாரை  அதன்  மேலும்  மிக்க
துன்பத்தினைச்  செய்தாற்போலும்.  ''பிறர்பால்  சேறலின்   நும்மைப்
பெறாது  புலந்தூடியிருக்கின்ற  பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப்
புல்லீராயின்,   அவராற்றார்''  என்பதாம்.  ஊடி  யவரை உணராமை
வாடிய  வள்ளி  முதல்அரிந்  தற்று. இதுவும் அது. நும்மோடு ஊடிய
பரத்தையரை  ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்;  பண்டே நீர் பெறாது
வாடிய    கொடியை    அடியிலே    அறுத்தாற்    போலும்.  ''நீர்
பரத்தையரிடத்தில்     ஆயவழி     எம்    புதல்வரைக்    கண்டு
ஆற்றியிருக்கற்பாலமாய    யாம்    நும்மோடு  ஊடுதற்குரியமல்லம்
அன்மையின்,  எம்மை  உணர்த்தல்  வேண்டா;  உரியராய்  ஊடிய
பரத்தையரையே  உணர்த்தல்   வேண்டுவது;   அதனால்  ஆண்டுச்
சென்மின்'',   என்பதாம்.  நலத்தகை  நல்லவர்க்  கேஎர்  புலத்தகை
பூஅன்ன   கண்ணா  ரகத்து.  தலைமகளைப்  புலவி  நீக்கிக்  கூடிய
தலைமகன் தன்னுள்ளே சொல்லியது நற்குணங்களால் தகுதியுடையராய
தலைவர்க்கும்  அழகாவது;  தம்  பூவன்ன  கண்ணார்  நெஞ்சின்கண்
நிகழும்  புலவி  மிகுதியன்றே சிறப்பு உம்மை விகாரத்தால்  தொக்கது.
''தவறில்லார்க்கும் புலவி இனி