தே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. இதுவும் அது. உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது. நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். ''இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது'', என்பதாம். ஊடல் உணங்க விடுவாரோ டென்நெஞ்சம் கூடுவேம் என்ப தவா. இதுவும் அது. தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்; விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், ''கூடுவேம் என்பது அவா'' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. ''இக்கூட்டம் முடியாது'' என்பதாம். அது, ''புலவியது'' நுணுக்கம் என விரியும் .அஃதாவது, தலைமகனும் தலைமகளும் ஒர் அமளிக்கண் கூடியிருந்துழி அவன் மாட்டுப் புலத்தற் காரண மில்லையாகவும், காதல் கைம்மிகுதலான் நூண்ணியதோர் காரணமுளதாக உட்கொண்டு, அதனை அவன்மேலேற்றி அவள் புலத்தல். காரணத்தின் நுணுக்கம் காரியத்தின்மேல் நின்றது . அதிகார முறைமையும் இதனானே விளங்கும். பெண்இயலார்
எல்லோரும் கண்ணின் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது. பரத்தைமையுடையாய்; நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொது |