வது யாது''? என்பதாம். நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யார்உள்ளி நோக்கினீர் என்று. இதுவும் அது. என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும் என்னை வெகுளாநிற்கும்; நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர, அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து? என்று சொல்லி. ''யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்கவேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின்'', என்னுங் கருத்தால் ''அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி''? என்றாள். ''வாளாவிருத்தலும் குற்றமாயிற்று'' என்பதாம். அஃதாவது, அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி, அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும், தலைமகன் உவத்தலும் ஆம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவர்அளிக்கு மாறு. தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது. அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ''அவர்க்கு'' என்பது, வேற்றுமை மயக்கம். ''அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது'' என்பதாம். ஊடலில்
தோன்றும் சிறுதுனி நல்அளி வாடினும் பாடு பெறும். புலவாக்காலும் அத்தலை |