யளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது. ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும். ''தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது'' என்பாள், ''சிறு துனி'' என்றும், ''ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது'' என்பாள், ''வாடினும்'' என்றும், ''பின்னே பேரின்பம் பயக்கும்'' என்பாள் ''பாடு பெறும்'' என்றும் கூறினாள். புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீர்இயைந் தன்னார் அகத்து. இதுவும் அது.நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை. நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், ''நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து'' என்றும், ''அவர் நமக்கும் அன்னராகலின்'', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது'' என்பாள், ''புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ'' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என் உள்ளம் உடைக்கும் படை. அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது. காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு
ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம். ''புலவியுள்'' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும். படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு. |