திருக்குறள்
ஓலை எண் :   461

Zoom In NormalZoom Out

தவறிலர்     ஆயினும்    தாம்வீழ்வார்   மென்தோள்   அகறலின்
ஆங்கொன்  றுடைத்து. தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன்
கழியுவகையனாய்த்   தன்னுள்ளே   சொல்லியது.  ஆடவர்  தங்கண்
தவறிலராயினும்,   உடையார்போல   ஊடப்பட்டுத்  தாம்  விரும்பும்
மகளிருடைய  மெல்லிய  தோள்களைக்  கூடப்பெறாத  எல்லைக்கண்;
அவர்க்கு    அப்பெற்றியதோர்    இன்பம்    பயத்தல்   உடைத்து.
உடையராயக்கால்  இறந்த  இன்பத்தோடு  வரும்  இன்பமுமெய்துவர்
ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை
இகழ்ந்ததில்லை  என்னும் கருத்தால், ''தவறிலராயினும் ஆங்கு ஒன்று
உடைத்து''    என்றான்.   ஊடலினாய   இன்பம்   அளவிறத்தலின்,
''கூறற்கரிது''  என்பான், ''அப்பெற்றியதொன்று'' என்றான்.  ''தவறின்றி''
ஊடியதூஉம்  எனக்கு  இன்பமாயிற்று'' என்பதாம். உணலினும் உண்ட
தறல்இனிது   காமம்   புணர்தலின்  ஊடல்  இனிது.  இதுவும்  அது.
உயிர்க்கு,  மேலுண்பதனினும்  முன்  உண்டது அறுதல் இன்பந்தரும்;
அதுபோலக்  காமத்திற்கு  மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி
ஊடுதல்   இன்பம்   தரும்.   ''காமத்திற்கு''  என்புழிச்  சாரியையும்
நான்கனுருபும்   விகாரத்தால்   தொக்கன.   பசித்துண்ணும்வழி  மிக
உண்ணலுமாய்  இன்சுவைத்துமாம்;  அது  போல,அகன்று  கூடும்வழி
ஆராததுமாய்ப்  பேரின்பத்ததுமாம்  எனத்  தன்  அனுபவம் பற்றிக்
கூறியவாறு.  ஊடலில்  தோற்றவர்  வென்றார்  அதுமன்னும் கூடலில்
காணப்   படும்.   இதுவும்  அது.  காமம்  நுகர்தற்குரிய  இருவருள்
ஊடலின்கண்    தோற்றவர்    வென்றாராவர்;  அது  அப்பொழுது
அறியப்படாதாயினும்,    பின்னைப்    புணர்ச்சியின்கண்   அவரால்
அறியப்படும்.   தோற்றவர்   -  எதிர்தலாற்றாது  சாய்ந்தவர். அவர்
புணர்ச்சிக்கண்  பேரின்பம்  எய்தலின்  வென்றாராயினார்.  மன்னும்
உம்மும் அசைநிலை.