திருக்குறள்
ஓலை எண் :   462

Zoom In NormalZoom Out

''யான்    அது  பொழுது   சாய்தலின்,   இது  பொழுது  பேரின்பம்
பெற்றேன்'' என்பதாம். ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில்  தோன்றிய  உப்பு.  இதுவும் அது. இதுபொழுது இவள் நுதல்
வெயர்க்கும்வகை  கலவியின்கண் உளதாய இனிமையை; இன்னும் ஒரு
கால்  இவள்  ஊடி  யாம்  பெறவல்லேமோ? கலவியது விசேடம்பற்றி
''நுதல்   வெயர்ப்ப''   என்றான்.  இனிமை:  கண்டு  கேட்டு  உண்டு
உயிர்த்து  உற்றறிதலானாய இன்பம், ''இனி அப் பேறு  கூடாது'' எனப்
பெற்றதன்   சிறப்புக்   கூறியவாறு.   ஊடுக   மன்னோ   ஒளியிழை
யாம்இரப்ப  நீடுக  மன்னோ  இரா.  இதுவும்  அது. ஒளியிழையினை
உடையாள்   இன்னும்  எம்மோடு  ஊடுவாளாக;  அங்ஙனம்  அவள்
ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து  நிற்றற்கும்
காலம்  பெறும்  வகை,  இவ்விரவு  விடியாது  நீட்டித்தல்  வேண்டுக.
''ஊடுக'',   ''நீடுக''   என்பன   வேண்டிக்கோடற் பொருளன.   ''மன''
இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை.  கூடலின்
ஊடலே   அமையும்   என்பதாம்   ஊடுதல்   காமத்திற்    கின்பம்
அதற்கின்பம்  கூடி  முயங்கப் பெறின். இதுவும் அது  காமநுகர்ச்சிக்கு
இன்பமாவது  அதனை  நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித்  தம்முள்
ஊடுதல்;  அவ்வூடுதற்கு  இன்பமாவது  அதனை அளவறிந்து  நீங்கித்
தம்முள்  கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம். கூடுதல் - ஒத்த
அளவினராதல்.   முதிர்ந்த  துனியாயவழித்  துன்பம்   பயத்தலானும்,
முதிராத     புலவியாயவழிக்     கலவியின்பம்     பயவாமையானும்,
இரண்டற்கும்  இடையாகிய அளவறிந்து நீங்குதல்  அரிது என்பதுபற்றி,
''கூடிமுயங்கப்பெறின்''   என்றான்.  ''அவ்விரண்டு   இன்பமும்  யான்
பெற்றேன்'' என்பதாம். ஈண்டுப் பிரிவினை வடநூல் மத