| இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்குஒளி மேனி விரிசடை யாட்டி பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றித் தென்திசைப் பெயர்ந்தஇத் தீவத் தெய்வதம் சாகைச் சம்பு தன்கீழ் நின்று மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற சம்பு என்பாள் சம்பா பதியினள் செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை செங்குணக்கு ஒழுகிய அச்சம்பா பதிஅயல் பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற ஆங்கு இனிது இருந்த அருந்தவ முதியோள் ஓங்குநீர்ப் பாவையை உவந்துஎதிர் கொண்டு ஆங்கு ஆணு விசும்பின் ஆகாய கங்கை வேணவாத் தீர்த்த விளக்கே வாஎனப் பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டுஈங்கு அன்னை கேள்இவ் அருந்தவ முதியோள் நின்னால் வணங்கும் தன்மையள் வணங்குஎனப் பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை தொழுதனள் நிற்பஅத் தொல்மூ தாட்டி கழுமிய உவகையில் கவான்கொண் டிருந்து தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள் என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர் நின்பெயர்ப் படுத் |