மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   8
Zoom In NormalZoom Out

கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும்
கந்துகக் கருத்து மடைநூல் செய்தியும்
 
சுந்தரச் சுண்ணமும் தூநீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்துஉறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர்ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்
கற்றுத்துறை போகிய பொன்தொடி நங்கை
நல்தவம் புரிந்தது நாண்உடைத்து என்றே
அலகுஇல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர்தொகுபு உரைக்கும் பண்புஇல் வாய்மொழி
நயம்பாடு இல்லை நாண்உடைத்து என்ற
வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும்:
காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே
பொன்கொடி மூதூர்ப் பொருள்உரை இழந்து
நல்தொடி நங்காய் நாணுத் துறந்தேன்
காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
ஊதுஉலைக் குருகின் உயிர்த்துஅகத்து அடங்காது
இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்
நளிஎரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன்உறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர்