மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   10
Zoom In NormalZoom Out

மூன்றாவது
மலர்வனம்புக்க காதை
(மூன்றாவது மலர்வனம்புக்க பாட்டு)
வயந்த மாலைக்கு மாதவி உரைத்த
உயங்குநோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மாமலர் நாற்றம் போல்மணி மேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம்நனி உழந்த
வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்பக்
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
மாதர் செங்கண் வரிவனப்பு அழித்துப்
புலம்புநீர் உருட்டிப் பொதியவிழ் நறுமலர்
இலங்குஇதழ் மாலையை இட்டுநீ ராட்ட,
 
மாதவி மணிமே கலைமுகம் நோக்கித்
தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
காமர் செங்கையில் கண்ணீர் மாற்றித்
தூநீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்
மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்
சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடுந்துயர் கேட்டுத்
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேக கலைதன் மதிமுகம் தன்னுள்
அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய
கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்
படையிட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்
ஆங்ஙனம் அன்றியும் அணியிழை கேளாய்
ஈங்குஇந் நகரத்து யான்வருங் காரணம்
பாரா வாரம் பல்வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப் பாளன் ஒருமகள் உள்ளேன்
ஒருதனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு
ஆரா மத்திடை அலர்கொய் வேன்தனை
மாருத வேகன்என் பான்ஓர் விஞ்சையன்