| பேடுகாண் குநரும் வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச் சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மைஅறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும் விழவுஆற்றுப் படுத்த கழிபெரு வீதியில் பொன்நாண் கோத்த நன்மணிக் கோவை ஐயவி அப்பிய நெய்அணி முச்சி மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ் பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச் செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில் தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத் தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரைப் பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து இலங்குதொடி நல்லார் சிலர்நின்று ஏற்றி ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள் காண்மி னோஎனக் கண்டுநிற் குநரும் விராடன் பேர்ஊர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் மணிமே கலைதனை வந்துபுறம் சுற்றி அணியமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவுஇலள் ஈங்குஇவள் மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின் நல்இள அன்னம் நாணாது ஆங்குஉள வல்லுந கொல்லோ மடந்தை தன்நடை மாமயில் ஆங்குஉள வந்துமுன் நிற்பன சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன் பைங்கிளி தாம்உள |