மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   16
Zoom In NormalZoom Out

மயில் தனக்குக்
கம்புள் சேவல் கனைகுரல் முழவாக்
கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்
இயங்குதேர் வீதி எழுதுகள் சேர்ந்து
வயங்குஒளி மழுங்கிய மாதர்நின் முகம்போல
விரைமலர்த் தாமரை கரைநின்று ஓங்கிய
கோடுஉடைத் தாழைக் கொழுமடல் அவிழ்ந்த
வால்வெண் சுண்ணம் ஆடியது இதுகாண்
மாதர் நின்கண் போதுஎனச் சேர்ந்து
தாதுஉண் வண்டுஇனம் மீதுகடி செங்கையின்
அம்சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டுஆங்கு
எறிந்துஅது பெறாஅது இரைஇழந்து வருந்தி
மறிந்து நீங்கு மணிச்சிரல் காண்எனப்
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
மணிமே கலைஅம் மலர்வனம் காண்புழி
மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதய குமரன் உருகெழு மீதூர்
நீயான் நடுங்க நடுவுநின்று ஓங்கிய
கூம்புமுதல் முறிய வீங்குபிணி அவிழ்ந்து
கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்கு
இதைசிதைந்து ஆர்ப்பத் திரைபொரு மு