| போகு பெருவழி வீதிமருங்கு இயன்ற பூஅணைப் பள்ளித் தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான்கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டி குமரன் இருந்தோன் தன்னை மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய் யாதுநீ உற்ற இடுக்கண் என்றலும், ஆங்குஅது கேட்டு வீங்குஇள முலையொடு பாங்கில் சென்று தான்தொழுது ஏத்தி மட்டுஅவிழ் அலங்கல் மன்ன குமரற்கு எட்டி குமரன் எய்தியது உரைப்போன் வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல் தகைநலம் வாடி மலர்வனம் புகூஉ மாதவி பயந்த மணிமே கலையொடு கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற நெஞ்சுஇறை கொண்ட நீர்மையை நீக்கி வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது இதுயான் உற்ற இடும்பை என்றலும் மதுமலர்த் தாரோன் மனம்மகிழ் எய்தி ஆங்குஅவள் தன்னைஎன் அணித்தேர் ஏற்றி ஈங்குயான் வருவேன் என்றுஅவற்கு உரைத்து ஆங்கு ஓடுமழை கிழியும் மதியம் போல மா |