மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   19
Zoom In NormalZoom Out

ட வீதியின் மணித்தேர் கடைஇக்
கார்அணி பூம்பொழில் கடைமுகம் குறுகஅத்
தேர்ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
சித்திரா பதியோடு உதய குமரன்உற்று
என்மேல் வைத்த உள்ளத் தான்என
வயந்த மாலை மாதவிக்கு ஒருநாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்குஅவன் தேர்ஒலி போலும் ஆயிழை
 
ஈங்குஎன் செவிமுதல் இசைத்ததுஎன் செய்கென
அமுதுஉறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும்
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுகென்று
ஒளித்து அறை தாழ்கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்குஅது தனக்குஓர் ஐவிலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர்இழை தன்னைக்
கல்என் தானையொடு கடுந்தேர் நிறுத்திப்
பல்மலர்ப் பூம்பொழில் பகல்முளைத் ததுபோல்
 

 
பூமரச் சோலையும் புடையும் பொங்கரும்
 
தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம்
 
அரசிளங் குமரன் ஆரும்இல் ஒருசிறை
 
ஒருதனி நின்றாய் உன்திறம் அறிந்தேன்.
 
வளர்இள வனமுலை மடந்தை மெல்இயல்
 
தளர்இடை அறியும் தன்மையள் கொல்லோ
 
விளையா மழலை விளைந்து மெல்இயல்
 
முளைஎயிறு அரும்பி முத்துநிரைத் தனகொல்
 
செங்கயல்