| பளிங்கின் எழினி வீழ்த்துத் திருவின் செய்யோள் ஆடிய பாவையின் விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவி லாளனொடு உருவம் பெயர்ப்ப ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து தாழ்ஒளி மண்டபம் தன்கையில் தடைஇச் சூழ்வோன் சுதமதி தன்முகம் நோக்கிச் சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன எத்திறத் தாள்நின் இளங்கொடி உரைஎனக் குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின் முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி காமன் கடந்த வாய்மையள் என்றே தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்பச் சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் செவ்வியள் ஆயின்என் செவ்வியள் ஆகென அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை அம்செஞ் சாயல் அராந்தா ணத்துள்ஓர் விஞ்சையன் இட்ட விளங்குஇழை என்றே கல்என் பேரூர்ப் பல்லோர் உரையினை ஆங்குஅவர் உறைவிடம் நீங்கி ஆயிழை ஈங்குஇவள் தன்னோடு எய்தியது உரைஎன வார்கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி ஈங்குஇவள் தன்னோடு எய்திய காரணம் வீங் |