| குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் யாப்புஉடை உள்ளத்து எம்அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன் படிம உண்டியன் மழைவளம் தரூஉம் அழல்ஓம் பாளன் பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய என்கெடுத்து இரங்கித் தன்தக வுடைமையின் குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறைப் பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் கடன்மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய வடமொழி யாளரொடு வருவோன் கண்டுஈங்கு யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்துஆங்கு ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் காதலன் ஆதலின் கைவிட லீயான் இரந்து ஊண் தலைக்கொண்டு இந்நகர் மருங்கில் பரந்துபடு மனைதொறும் திரிவோன் ஒருநாள் புனிற்றுஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன் கணவிரி மாலை கைக்கொண் டென்ன நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி என்மகள் இருந்த இடமென்று எண்ணித் தன்உறு துன்பம் தாங்காது புகுந்து சமணீர் காள்நும் சரண்என் றோனை இவண்நீர் அல்லஎன்று என்னொடும் வெகுண்டு மைஅறு படிவத்து மாதவர் புறத்துஎமைக் கைஉதிர்க் கோடலின் கண்நிறை நீரேம் அறவோர் உளீரோ ஆரும்இ லோம்எனப் புறவோர் வீதியில் புலம்பொடு |