| சாற்ற மங்குல்தோய் மாடம் மனைதொறும் புகூஉம் அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன் பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன் என்உற் றனிரோ என்றுஎமை நோக்கி அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்துத் தன்கைப் பாத்திரம் என்கைத் தந்துஆங்கு எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலைஏற்றி மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி சங்க தருமன் தான்எமக்கு அருளிய எங்கோன் இயல்குணன் ஏதம்இல் குணப்பொருள் உலக நோன்பின் பலகதி உணர்ந்து தனக்குஎன வாழாப் பிறர்க்குஉரி யாளன் இன்பச் செவ்வி மன்பதை எய்த அருள்அறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின் அறக்கதிர் ஆழிதிறப்பட உருட்டிக் காமன் கடந்த வாமன் பாதம் தகைபா ராட்டுதல் அல்லது யாவதும் மிகைநா இல்லேன் வேந்தே வாழ்கென அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன் வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச் சித்திரா பதியால் சேர்தலும் உண்டுஎன்று அப்பொழில் ஆங்குஅவன் அயர்ந்து போயபின் பளிக்குஅறை திறந்து பனிமதி முகத்துக் களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக் கற்புத் தான்இலள் நல் |