மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   24
Zoom In NormalZoom Out

தவ உணர்வுஇலள்
வருணக் காப்புஇலள் பொருள்விலை யாட்டிஎன்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுகதன் திறம்என
மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான்
சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழாஅணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமே கலாதெய்வம்
பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகி
மணிஅறைப் பீடிகை வலம்கொண்டு ஓங்கிப்
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ
காமன் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ
ஆயிர ஆரத்து ஆழியன் திருந்தடி
நாஆ யிரம்இலேன் ஏத்துவது எவன்என்று
எரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து
ஒருதனி திரிவதுஒத்து ஓதியின் ஒதுங்கி
நிலவரை இறந்துஓர் முடங்குநா நீட்டும்
புலவரை இறந்த புகார்எனும் பூங்கொடி
பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப்
புள்ஒலி சிறந்த தெள்அரிச் சிலம்புஅடி
ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை
வாயில்மருங்கு இயன்ற வான்பணைத் தோளி
தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம்
எதிர்எதிர் ஓங்கிய கதிர்இள வன