மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   26
Zoom In NormalZoom Out

கதிர் மண்டிலம்
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசுஅறு விசும்பில் மறுநிறம் கிளர
ஆசுஅற விளங்கிய அம்தீம் தண்கதிர்
வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல்
கள்அவிழ் பூம்பொழில் இடைஇடைச் சொரிய
உருவு கொண்ட மின்னே போலத்
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்
ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்திப்
பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகிச்
சுதமதி நல்லாள் தன்மதிமுகம் நோக்கி
ஈங்கு நின்றீர் என்உற் றீர்என
ஆங்குஅவள் ஆங்குஅவன் கூறியது உரைத்தலும்
அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி
அறத்தோர் வனம்என்று அகன்றறனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்
பெருந்தெரு ஒழித்துஇப் பெருவனம் சூழ்ந்த
திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கர வாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடுநவை எய்தாது
அங்குநீர் போம்என்று அருந்தெய்வம் உரைப்ப
வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும்
அம்செஞ் சாயல் நீயும் அல்லது
நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டுக் கோட்டம் என்றுஅலது உரையார்
சக்கர வாளக் கோட்டம் அஃதுஎன
மிக்