| மும் நிறைக்கல் தெற்றியும் மிறைக்களச் சந்தியும் தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும் தூமக் கொடியும் சுடர்த்தோ ரணங்களும் ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும் துறவோர் இறந்த அழுவிளிப் பூசலும் பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும் நீள்முக நரியின் தீவிளிக் கூவும் சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் புலவுஊண் பொருந்திய குராலின் குரலும் ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் நல்நீர்ப் புணரி நளிகடல் ஓதையின் இன்னா இசையொலி என்றும்நின்று அறாது தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஒங்கிக் கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும் மால்அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் வெள்நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து புள்இறை கூரும் வெள்ளில் மன்றமும், சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும், விரத யாக்கையர் உடைதலை தொகுத்துஆங்கு |