மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   29
Zoom In NormalZoom Out

இருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில்
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல்பெய் குழிசியும் புழல்பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு் அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சிம்பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்குஇரும் பறந்தலை
தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பஇவ்
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களில் சிறந்த மடவோர் உண்டோ?
ஆங்குஅது தன்னைஓர் அருங்கடி நகர்எனச்
சார்ங்கல் என்போன் தனிவழிச் சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கைஎன்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழுஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்டு
உலப்புஇல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப்புற அல்குல் கழுகுகுடைந்து உண்டு
நிலைத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறிந்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்துஇள வனமுலை
காய்ந்தபசி எருவை கவர்ந்துஊண் ஓதையும்
பண்புகொள் யாக்கையின் வெண்ப