| லி அரங்கத்து மண்கணை முழவம் ஆக ஆங்குஓர் கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி இரும்பேர் உவகையின் எழுந்துஓர் பேய்மகள் புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ விதழோ கவிரோ பல்லோ முத்தோ வென்னா திரங்காது கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துக் தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக் கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி விண்டோர் திசையின் விளித்தனன் பெயர்ந்தீங் கெம்மனை காணா யீமச் சுடலையின் வெம்முது பேய்க்கென் னுயிர்கொடுத் தேனெனத் தம்மனை தன்முன் விழ்ந்துமெய் வைத்தலும் பார்ப்பான் றன்னொடு கண்ணிழந் திருந்தவித் தீத்தொழி லாட்டியென் சிறுவன் றன்னை யாருமி றமியே னென்பது நோக்கா தாருயி ருண்ட தணங்கோ பேயோ துறையு மன்றமுந் தொல்வலி மரனும் உறையுளுங் கோட்டமுங் காப்பாய் காவாய் தகவிலை கொல்லோ சம்பா பதியென மகன்மெய் யாக்கையை மார்புஉறத் தழீஇ ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில் கோதமை என்பாள் கொடுந்துயர் சாற்றக் கடிவழங்கு வாயிலில் கடுந்துயர் எய்தி இடைஇருள் யாமத்து என்னைஈங்கு அழைத்தனை என்உற் றனையோ எனக்குஉரை என்றே பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற ஆரும்இ லாட்டிஎன் அறியாப் பாலகன் ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை அணங்கோ |