மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   31
Zoom In NormalZoom Out

பேயோ ஆர்உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்என,
அணங்கும் பேயும் ஆர்உயிர் உண்ணா
பிணங்குநூல் மார்பன் பேதுகந் தாக
ஊழ்வினை வந்துஇவன் உயிர்உண்டு கழிந்தது
மாபெரும் துன்பம் ஒழிவாய் என்றலும்
என்உயிர் கொண்டுஇவன் உயிர்தந் தருளில்என்
கண்ணில் கணவனை யிவன்காத் தோம்பிடும்
இவனுயிர் தந்தென் னுயிர்வாங் கென்றலும்
முதுமூ தாட்டி யிரங்கினண் மொழிவோள்
ஐய முண்டோ வாருயிர் போனாற்
செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல்
ஆங்கது கொணர்ந்துநின் னாரிடர் நீக்குதல்
ஈங்கெனக் காவதொன் றன்றுநீ யிரங்கல்
கொலையற மாமெனுங் கொடுந்தொழின் மாக்கள்
அவலப் படிற்றுரை யாங்கது மடவாய்
உலக மன்னவர்க் குயிர்க்குயி ரீவோர்
இலரோ விந்த வீமப் புறங்காட்
பூரசர்க் கமைந்தன வாயிரங் கோட்டம்
நிரயக் கொடுமொழி நீயொழி யென்றலும்
தேவர் தருவர் வரமென் றொருமுறை
நான்மறை யந்தணர் நன்னூ லுரைக்கும்
மாபெருந் தெய்வ நீயரு ளாவிடின்
யானோ காவே னென்னுஉயிர் ஈங்குஎன,
ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
தாம்தரின் யானும் தருகுவன் மடவாய்
ஈங்குஎன் ஆற்றலும் காண்பாய் என்றே
நால்வகை மரபின் அரூபப் பிரமரும்
நானால் வகையின் உரூபப் பிர