மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   32
Zoom In NormalZoom Out

மரும்
இருவகைச் சுடரும் இருமூ வகையில்
பெருவனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல்வகை அசுரரும் படுதுயர் உறூஉம்
எண்வகை நரகரும் இருவிசும்பு இயங்கும்
பல்மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன்அகத்து அடக்கிய சக்கர வாளத்து
வரம்தரற்கு உரியோர் தமைமுன் நிறுத்தி
அரந்தை கெடும்இவள் அருந்துயர் இதுஎனச்
சம்பா பதிதான் உரைத்தஅம் முறையே
எங்குவாழ் தேவரும் உரைப்பக் கேட்டே
கோதமை யுற்ற கொடுந்துயர் நீங்கி
ஈமச் சுடலையின் மகனைஇட்டு இறந்தபின்
சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற
எங்குவாழ் தேவரும் கூடிய இடம்தனில்
சூழ்கடல் வளைஇய வாழியங் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையில் நின்ற எழுவகைக் குன்றமும்
நால்வகை மரபின் மாபெருந் தீவும்
ஓர்ஈ ராயிரம் சிற்றிடைத் தீவும்
பிறவும் ஆங்குஅதன் இடவகை உரியன
பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி
ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து
மிக்க மயனால் இழைக்கப் பட்ட
சக்கர வாளக் கோட்டம்ஈங்கு இதுகாண்
இடுபிணக் கோட்டத்து எயில்புறம் ஆதலின்
சுடுகாட்டுக் கோட்டத்து என்றலது உரையார்
இதன்வரவு இதுஎன்று இருந்தெய்வம் உரைக்க
மதன் இல் நெசமொடு வான்துயர்எய்திப்
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்துஇருள் கூர்ந்த இடைஇ