ஏழாவது
துயிலெழுப்பிய காதை
(ஏழாவது மணிமேகலாதெய்வம் உவவனம் புகுந்து சுதமதியைத் துயிலெழுப்பியபாட்டு) மணிமே கலைதனை மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம் வைத்து நீங்கி மணிமே கலைதனை மலர்ப்பொழில் கண்ட உதய குமரன் உறுதுயர் எய்திக் கங்குல் கழியில்என் கையகத் தாள்எனப் பொங்குமெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும் மாரிவறங் கூரின் மன்உயிர் இல்லை மன்உயிர் எல்லாம் மண்ஆள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதிஇன்று ஆகும் தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிகென்று அவன்வயின் உரைத்தபின் உவவனம் புகுந்துஆங்கு உறுதுயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி இந்திர கோடணை இந்நகர்க் காண வந்தேன் அஞ்சல் மணிமே கலையான் ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம் ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின் விஞ்சையின் பெயர்த்துநின் விளங்குஇழை தன்னைஓர் வஞ்சம்இல் மணிபல் லவத்திடை வைத்தேன் பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்துஈங்கு இன்றுஏழ் நாளில் இந்நகர் மருங்கே |