மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   35
Zoom In NormalZoom Out

வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
களிப்புமாண் செல்வக் காவல் பேர்ஊர்
ஒளித்துஉரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
ஆங்குஅவள் இந்நகர் புகுந்த அந்நாள்
ஈங்கு நிகழ்வன ஏதுப் பலஉள
மாதவி தனக்குயான் வந்த வண்ணமும்
ஏதம்இல் நெறிமகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீஅவள் என்திறம் உணரும்
திரைஇரும் பௌவத்துத் தெய்வம்ஒன்று உண்டுஎனக்
கோவலன் கூறிஇக் கொடியிடை தன்னைஎன்
நாமம் செய்த நல்நாள் நள்இருள்
காமன் கையறக் கடுநவை அறுக்கும்
மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே
நனவே போலக் கனவகத்து உரைத்தேன்
ஈங்குஇவ் வண்ணம் ஆங்குஅவட்கு உரைஎன்று
அந்தரத்து எழுந்துஆங்கு அருந்தெய்வம் போயபின்
வெந்துயர் எய்திச் சுதமதி எழுந்துஆங்கு
அகல்மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கு அரங்கியல் மகளிரில்
கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை
கொளைவல் ஆயமோடு இசைகூட் டுண்டு
வளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த