மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   36
Zoom In NormalZoom Out

வெம்மைவெய் துறாது தன்மையில் திரியவும்
பண்புஇல் காதலன் பரத்தமை நோனாது
உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்
விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும்
தளர்நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறுதேர் ஈர்த்துமெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய் குறுநடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபம் காட்டித் தூங்குதுயில் வதியவும்
இறைஉறை புறவும் நிறைநீர்ப் புள்ளும்
காவுறை பறவையும் நாஉள் அழுந்தி
விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று
பழவிறல் மூதூர் பாயல்கொள் நடுநாள்
கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்
யாமம் கொள்பவர் ஏத்துஒலி அரவமும்
உறையுள்நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறைஅழி யானை நெடுங்கூ விளியும்
தேர்வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
ஊர்காப் பாளர் எறிதுடி ஓதையும்
முழங்கு