மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   37
Zoom In NormalZoom Out

நீர் முன்துறைக் கலம்புணர் கம்மி
அடு கள்ளின் தோப்பிஉண்டு அயர்ந்து
பழஞ்செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்
அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
தீர்வினை மகளிர் குளன்ஆடு அரவமும்
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலிக்கணத்து அன்னோர் பூத சதுக்கத்துக்
கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்கென
இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர்
தம்துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென
நின்றுஎறி பலியின் நெடுங்குரல் ஓதையும்
பல்வேறு ஓதையும் பரந்துஒருங்கு இசைப்பக்,
கேட்டுஉளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து
முருந்துஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில்
திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி
மிக்கமா தெய்வம் வியந்துஎடுத்து உரைத்த
சக்கர வாளக் கோட்டத்து அங்கண்
பலர்