| பூங்கொடி யார்கைப் புள்ஒலி சிறப்பக் கடவுள் பீடிகைப் பூப்பலி கடைகொளக் கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக் குயிலுவர் களடதொறும் பண்ணியம் பரந்துஎழக் கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்துஎழ ஊர்துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக் கார்இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும் ஏஉறு மஞ்ஞையின் இனைந்ததுஅடி வருந்த மாநகர் வீதி மருங்கில் போகிப் போய கங்குலில் புகுந்ததை எல்லாம் மாதவி தனக்கு வழுஇன்று உரைத்தலும் நல்மணி இழந்த நாகம் போன்றுஅவள் தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப இன்உயிர் இழந்த யாக்கையில் இருந்தனள் துன்னியது உரைத்த சுதமதி தான்என். துயில் எழுப்பிய காதை முற்றிற்று. |
(எட்டாவது
மணிபல்லவத்துத் துயிலெழுந்து துயருற்ற பாட்டு) |
| |
| ஈங்குஇவள் இன்னண மாக இருங்கடல் வாங்குதிரை உடுத்த மணிபல் லவத்திடைத் தத்துநீர் அடைகரைச் சங்குஉழு தொடுப்பின் முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு விரைமரம் உருட்டும் திரைஉலாப் பரப்பின் ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின் ஆம்பலும் குவளையும் தாம்புணர்ந்து மயங்கி வண்டுஉண மலர்ந்த குண்டுநீர் இலஞ்சி முடக்கால் புன்னையும் மடல்பூந் |
|  |