மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   40
Zoom In NormalZoom Out

தாழையும்
வெயில்வரவு ஒழித்த பயில்பூம் பந்தர்
அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித்
துஞ்சுதுயில் எழூஉம் அம்சில் ஓதி
காதல் சுற்றம் மறந்து கடைகொள
வேறுஇடத்துப் பிறந்த உயிரே போன்று
பண்டுஅறி கிளையொடு பதியும் காணாள்
கண்டுஅறி யாதன கண்ணிற்காணா
நீல மாக்கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப
உவவன மருங்கினில் ஓர்இடம் கொல்இது
சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை
நனவோ கனவோ என்பதை அறியேன்
மனநடுக் குறூஉம் மாற்றம் தாராய்
வல்இருள் கழிந்தது மாதவி மயங்கும்
எல்வளை வாராய் விட்டுஅகன் றனையோ
விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்
ஒருதனி அஞ்சுவென் திருவே வாவெனத்
திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்
எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்
அன்னச் சேவல் அரச னாகப்
பன்னிறப் புள்இனம் பரந்துஒருங்கு ஈண்டிப்
பாசறை மன்னர் பாடி போல
வீசுநீர்ப் பரப்பின் எதிர்எதிர் இருக்கும்
துறையும் துறைசூழ் நெடுமணல் குன்றமும்
யாங்க