| ணும் திரிவோள் பாங்கினம் காணாள் குரல்தலைக் கூந்தல் குலைந்துபின் வீழ அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி வீழ்துயர் எய்திய விழுமக் கிளவியில் தாழ்துயர் உறுவோள் தந்தையை உள்ளி எம்இதில் படுத்தும் வெவ்வினை உருப்பக் கோல்தொடி மாதரொடு வேற்றுநாடு அடைந்து வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயா வோஎன்று அழுவோள் முன்னர் விரிந்துஇலங்கு அவிர்ஒளி சிறந்துகதிர் பரப்பி உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித் திசைதொறும் ஒன்பான் முழுநிலம் அகன்று விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று பதும சதுரம் மீமிசை விளங்கி அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை பிறப்புவிளங்கு அவிர்ஒளி அறத்தகை ஆசனம் கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தமபெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு |