ஒன்பதாவது
பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை
(ஒன்பதாவது மணிமேகலை மணிபல்லவத்திடைப்
பீடிகைகண்டு புறப்புணர்ந்த பாட்டு) ஆங்குஅது கண்ட ஆயிழை அறியாள் காந்தள்அம் செங்கை தலைமேல் குவிந்தன தலைமேல் குவிந்த கையள் செங்கண் முலைமேல் கலுழ்ந்துமுத் தத்திரள் உகுத்துஅதின் இடமுறை மும்முறை வலமுறை வாராக் கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன இறுநுசுப்பு அலச வெறுநிலம் சேர்ந்துஆங்கு எழுவோள் பிறப்பு வழுஇன்று உணர்ந்து தொழுதகை மாதவ! துணிபொருள் உணர்ந்தோய!் காயங் கரையில் உரைத்ததை எல்லாம் வாயே ஆகுதல் மயக்குஅற உணர்ந்தேன் காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப் பூருவ தேயம் பொறைகெட வாழும் அத்தி பதிஎனும் அரசாள் வேந்தன் மைத்துனன் ஆகிய பிரம தருமன் ஆங்குஅவன் தன்பால் அணைந்துஅறன் உரைப்போய் தீங்கனி நாவல் ஓங்கும்இத் தீவிடை இன்றுஏழ் நாளில் இருநில மாக்கள் நின்றுநடுக்கு எய்த நீள்நில வேந்தே பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந்நகர் நா |