பத்தாவது
மந்திரங்கொடுத்த காதை
(பத்தாவது மணிமேகலாதெய்வம் வந்துதோன்றி
மந்திரந்கொடுத்த பாட்டு) அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐதுஎன விரைமலர் ஏந்தி விசும்பூடு இழிந்து பொருஅறு பூங்கொடி பூமியில் பொலிந்தென வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம் முந்தைப் பிறப்புஎய்தி நின்றோள் கேட்ப உயிர்கள் எல்லாம் உணர்வுபாழ் ஆகிப் பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்துஅறிவு இழந்த வறந்தலை உலகத்து அறம்பாடு சிறக்கச் சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலைஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன நீயோ தோன்றினை நின்அடி பணிந்தேன் நீயே ஆகிநிற்கு அமைந்தஇவ் ஆசனம் நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன் பூமிசை ஏற்றினேன் புலம்புஅறுக என்றே வலம்கொண்டு ஆசனம் வணங்குவோன் முன்னர்ப் பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்துஎனப் பொருந்தி உன்திரு அருளால் என்பிறப்பு உணர்ந்தேன் என்பெருங் கணவன் யாங்குஉளன் என்றலும் இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின் இடங்கழி காமமொடு அடங்கா னாய்அவன் மடந்தை மெல்இயல் மலர்அடி வணங்குழிச் சாது சக்கரன் மீவிசும்பு திரி |