| வோன் தெருமரல் ஒழித்துஆங்கு இரத்தின தீவத்துத் தரும சக்கரம் உருட்டினன் வருவோன் வெங்கதிர் அமயத்து வியன்பொழில் அகவயின் வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி மெல்இயல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச இராகுலன் வந்தோன் யார்என வெகுளலும் விராமலர்க் கூந்தல் அவன்வாய் புதையா வான்ஊடு இழிந்தோன் மலர்அடி வணங்காது நாநல் கூர்ந்தனை என்றுஅவன் தன்னொடு பசைஅறு பாத்தியன் பாதம் பணிந்துஆங்கு, அமர கேள்நின் தமர்அலம் ஆயினும் அம்தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் உண்டி யாம்உன் குறிப்பினம் என்றலும் எம்அனை உண்கேன் ஈங்குக் கொணர்கென அந்நாள் அவன்உண் டருளிய அவ்வறம் நின்ஆங்கு ஒழியாது நின்பிறப்பு அறுத்திடும் உவவன மருங்கில் உன்பால் தோன்றிய உதய குமரன் அவன்உன் இராகுலன் ஆங்குஅவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கும்உண்டு ஆகலின் கந்த சாலியின் கழிபெரு வித்துஓர் வெந்துஉகு வெண்களர் வீழ்வது போன்ம்என அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னைஓர் திறப்படற்கு ஏதுவாச் சேயிழை செய்தேன் இன்னும் கேளாய் இலக்குமி! நீநின் தவ்வையர் ஆவோர் தாரை |