| கையின மலைமரம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும் வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் அவ்வகை அறிவது உயிரெனப் படுமே வற்பம் ஆகி உறுநிலம் தாழ்ந்து சொல்படு சீதத் தொடுசுவை உடைத்தாய் இழின்என நிலம்சேர்ந்து ஆழ்வது நீர்தீத் தெறுதலும் மேல்சேர் இயல்பும் உடைத்தாம் காற்று விலங்கி அசைத்தல் கடனிவை வேற்றியல்பு எய்தும் விபரீ தத்தால் ஆதி இல்லாப் பரமா ணுக்கள் தீதுஉற்று யாவதும் சிதைவது செய்யா புதிதாய்ப் பிறந்துஒன்று ஒன்றில் புகுதா முதுநீர் அணுநில அணுவாய்த் திரியா ஒன்றிரண் டாகிப் பிளப்பதும் செய்யா அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் குலாமலை பிறவாக் கூடும் பலவும் பின்னையும் பிரிந்துதம் தன்மைய ஆகும் மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமும்ஆம் வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும் தேயா மதிபோல் செழுநில வரைப்பாம் நிறைந்தஇவ் அணுக்கள் பூதமாய் நிகழின் குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் ஒன்று முக்கால் அரைகா லாய்உறும் துன்றும்மிக் கதனால் பெ |