| யர் சொலப் படுமே இக்குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்ச் சிக்கென் பதுவும் நீராய் இழிவதும் தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் ஆய தொழிலை அடைந்திட மாட்டா ஓர்அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர் மாலைப் போதில் ஒருமயிர் அறியார் சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும் கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும் பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் என்றுஇவ் வாறு பிறப்பினும் மேவிப் பண்புஉறு வரிசையிற் பால்பட்டுப் பிறந்தோர் கழிவெண் பிறப்பில் கலந்துவீடு அணைகுவர் அழியல் வேண்டார் அதுஉறற் பாலார் இதுசெம் போக்கின் இயல்புஇது தப்பும் அதுமண் டலம்என்று அறியல் வேண்டும் பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் உறும்இடத்து எய்தலும் துக்கசுகம் உறுதலும் பெரிதவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் கருவில் பட்ட பொழுதே கலக்கும் இன்பமும் துன்பமும் இவையும்அணு எனத்தகும் முன்உள ஊழே பின்னும்உறு விப்பது மற்கலி நூலின் வகைஇது என்னச் சொல்தடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு நிகண்ட வாதியை நீஉரை நின்னால் புகழும் தலைவன்யார் நூல் |