| பொருள் யாவை அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்புஎன விளம்பல் உறுவோன் இந்திரர் தொழப்படும் இறைவன்எம் இறைவன் தந்த நூல்பொருள் தன்மாத்தி காயமும் அதன்மாத்தி காயமுங் காலா காயமும் தீதுஇல் சீவனும் பரமா ணுக்களும் நல்வினை யும்தீ வினையும்அவ் வினையால் செய்வுறு பந்தமும் வீடும்இத் திறத்த ஆன்ற பொருள்தன் தன்மைய தாயும் தோன்றுசார்வு ஒன்றின் தன்மைய தாயும் அநித்தமும் நித்தமும் ஆகி நின்று நுனித்த குணத்துஓர் கணத்தின் கண்ணே தோற்றமும் நிலையும் கேடும் என்னும் மாற்றுஅரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் நிம்பம் முளைத்து நிகழ்தல் அநித்தியம் நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம் பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம் இயற்றி அப்பயறு அழிதலும் ஏதுத் தருமாத்தி காயம் தான்எங்கும் உளதாய்ப் பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா அப்படித் தாகி யததன்மாத்தி காயமும் எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும் காலம் கணிகம் எனும்குறு நிகழ்ச்சியும் ஏலும் கற்பத் தின்நெடு நிகழ்ச்சியும் ஆக்கும்ஆ காயம் எல்லாப் பொருட்கும் பூக்கும்இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் சீவன் உடம்போடு ஒத்துக் கூடி |