| த் தாஇல்சுவை முதலிய புலன்களை நுகரும் ஓர்அணு புற்கலம் புறவுரு வாகும் சீர்சால் நல்வினை தீவினை அவைசெயும் வருவழி இரண்டையும் மாற்றி முன்செய் அருவினைப் பயன்அனு பவித்துஅறுத் திடுதல் அதுவீடு ஆகும் என்றனன் அவன்பின் இதுசாங் கியமதம் என்றுஎடுத்து உரைப்போன் தனைஅறிவு அரிதாய்த் தான்முக் குணமாய் மனநிகழ்வு இன்றி மாண்புஅமை பொதுவாய் எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம்எனச் சொல்லுதல் மூலப் பகுதிசித் தத்து மான்என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு அதன்கண்ஆ காயம் வெளிப்பட் டதன்கண் வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி ஆனது வெளிப்பட்டு அதன்கண் அப்பின் தன்மை வெளிப்பட்டு அதில்மண் வெளிப்பட்டு அவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்டு ஆர்ப்புஉறு மனத்துஆங் கார விகாரமும் ஆகா யத்தில் செவிஒலி விகாரமும் வாயுவில் தொக்கும் ஊறுஎனும் விகாரமும் அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும் தங்கிய அப்பில்வாய் சுவைஎனும் விகாரமும் நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் சொலப்பட்டு இவற்றின் தொக்கு விகாரமாய் வாக்குப் பாணிபாத பாயுரு உபத்தம்என ஆக்கிய இவைவெளிப் பட்டுஇங்கு அறைந்த பூத விகாரத் தால்மலை மரம்முதல் ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து வந்த வழியே இவைசென்று அட |