| ங்கி அந்தம்இல் பிரளய மாய்இறும் அளவும் ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியம்ஆம் அறிதற்கு எளிதாய் முக்குணம் அன்றிப் பொறிஉணர் விக்கும் பொதுவும் அன்றிப் எப்பொரு ளும்தோன் றுதற்குஇடம் அன்றி அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியமாய் நின்றுஉள உணர்வாய் நிகழ்தரும் புருடன் புலம்ஆர் பொருள்கள் இருபத் தைந்துஉள நிலநீர் தீவளி ஆகாயம்மே மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே உறுசுவை ஒளிஊறு ஓசைநாற் றம்மே வாக்குப் பாணிபாத பாயு ருபத்தம் ஆக்கும் மனோபுத்தி ஆங்கார சித்தம் உயிர்எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்எனச் செயிர்அறச் செப்பிய திறமும் கேட்டு வைசே டிகநின் வழக்குஉரை என்னப் பொய்தீர் பொருளும் குணமும் கருமமும் சாமா னியமும் விசேடமும் கூட்டமும் ஆம்ஆறு கூறும் அதில்பொருள் என்பது குணமும் தொழிலும் உடைத்தாய் எத்தொகைப் பொருளுக்கும் ஏதுவாம் அப்பொருள் ஒன்பான் ஞாலம்நீர் தீவளி ஆகா யம்திசை காலம் ஆன்மா மனம்இவற் றுள்நிலம் ஒலிஊறு நிறம்சுவை நாற்றமொடு ஐந்தும் பயில்குணம் உடைத்து நின்ற நான்கும் சுவைமுதல் ஒரோ |