மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   144
Zoom In NormalZoom Out

குணம் அவைகுறைவு உடைய
ஓசை ஊறு நிறம்நாற் றம்சுவை
மாசுஇல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம்முதல் அனேகம்
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும்முதல் பொதுத்தான்
போதலும் நிற்றலும் பொதுக்குணம் ஆதலின்
சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்மை
ஒன்றுஅணு கூட்டம் குணமும் குணியும்என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
பூத வாதியைப் புகல்நீ என்னத்
தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக்களி பிறந்துஆங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அவ்வப் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறைஓ சையில்கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும்
உயிர்இல் லாத உணர்வுஇல் பூதமும்
அவ்வப் பூத வழிஅவை பிறக்கும்
மெய்வகை இதுவே வேறுஉரை விகற்பமும்
உண்மைப் பொருளும்உலோ காயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயனும்இப் பிறப்பே
பொய்ம்மை மறுமைஉண் டாய்வினை துய்த்தல்
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
நன்றுஅல ஆயினும் நான்மாறு உரைக்கிலேன்
பிறந்த