| முற் பிறப்பை எய்தப் பெறுதலின் அறிந்தோர் உண்டோ என்றுநக் கிடுதலும் தெய்வ மயக்கினும் கனாஉறு திறத்தினும் மையல் உறுவோர் மனம்வே றாம்வகை ஐய அன்றி இல்லையென் றலும்நின் தந்தை தாயரை அனுமானத் தால்அலது இந்த ஞாலத்து எவ்வகை அறிவாய் மெய்உணர்வு இன்றிமெய்ப் பொருள்உணர்வு அரிய ஐயம் அல்லதுஇது சொல்லப் பெறாய்என உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள்உரைத்து ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்குஎன். சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை முற்றிற்று. ஆங்குத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து வாங்குவில் தனை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞைவெம் படையும் போல்புறம் சுற்றிய புறக்குடி கடந்து சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கலவை நீரும் எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் தந்தமில் ஆடிய சாந்துகழி நீரும் புவிகா வலன்தன் புண்ணிய நல்நாள் சிவிறியும் கொம்பும் சிதறுவிரை நீரும் மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல உபாசகர் செங்கைநறு நீரும் அறம்செய் மாக்கள் அகில்முதல் புகைத்து நிறைந்த பந்தல் தசும்புவார் நீரும் உறுப்புமுரண்உ |