| றாமல் கந்தஉத் தியினால் செறித்துஅரைப் போர்தம் செழுமனை நீரும் என்றுஇந் நீரே எங்கும் பாய்தலில் கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவுஒழி உடம்பின ஆகித் தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூமிசை பரந்து பொறிவண்டு ஆர்ப்ப இந்திர தனுஎன இலங்குஅகழ் உடுத்து வந்துஎறி பொறிகள் வகைமாண்பு உடைய கடிமதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் பசுமிளை பரந்து பல்தொழில் நிறைந்த வெள்ளிக் குன்றம் உள்கிழிந் தன்ன நெடுநிலை தோறும் நிலாச்சுதை மலரும் கொடிநிலை வாயில் குறுகினள் புக்குக் கடைகாப்பு அமைந்த காவலாளர் மிடைகொண்டு இயங்கும் வியன்மலி மறுகும் பல்மீன் விலைஞர் வெள்உப்புப் பகருநர் கள்நொடை யாட்டியர் காழியர் கூவியர் மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகும் இருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும் பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் மரங்கொல் தச்சரும் மண்ணீட் டாளரும் வரம்தர எழுதிய ஓவிய மாக்களும் தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் மாலைக் காரரும் காலக் கணிதரும் நலம்தரும் |