மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   147
Zoom In NormalZoom Out

பண்ணும் திறனும் வாய்ப்ப
நிலம்கலம் கண்டம் நிகழக் காட்டும்
பாணர் என்றுஇவர் பல்வகை மறுகும்
விலங்குஅரம் பொரூஉம் வெள்
வளை போழ்நரோடு
இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்
வேத்தியல் பொதுவியல் என்றுஇவ் விரண்டின்
கூத்தியல் அறிந்த கூத்தியர் மறுகும்
பால்வே றாக எண்வகைப் பட்ட
கூலம் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும்
போகம் புரக்கும் பொதுவர்பொலி மறுகும்
கண்நுழை கல்லா நுண்நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம்திகழ் மறுகும்
பொன்உரை காண்போர் நல்மனை மறுகும்
பல்மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோர் அருந்தொழில் குறையா மறுகும்
அரைசியன் மறுகும் அமைச்சியன் மறுகும்
எனைப்பெருந் தொழில்செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
புதுக்கோள் யானையும் பொன்தார்ப் புரவியும்
கதிக்குஉற வடிப்போர் கவின்பெறு வீதியும்
சேண்ஓங்கு அருவி தாழ்ந்தசெய் குன்றமும்
வேணவா மிகுக்கும் விரைமரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்புஇடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த நல்நீர் இடங்களும்
சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
கண்டுமகிழ்வு உற்றுக் கொண்ட வேடமோடு
அந்தர சாரிகள் அமர்ந்துஇனிது உறையும்
இந்திர விகாரம் எனஎழி