| ல் பெற்று நவைஅறு நாதன் நல்அறம் பகர்வோர் உறையும் பள்ளிபுக்கு இறைவளை நல்லாள் கோவலன் தாதை மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்துதன் பாத்திர தானமும் தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம்ஒன்று இன்றி உலகுஆள் செல்வமும் செல்வன் கொணர்ந்துஅத் தீவகப் பீடிகை ஒல்காது காட்டப் பிறப்பினை உணர்ந்ததும் உணர்ந்தோன் முன்னர் உயர்தெய்வம் தோன்றி மனம்கவல் கெடுத்ததும் மாநகர் கடல்கொள அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும் சாவக மன்னன் தன்நாடு எய்தத் தீவகம் விட்டுஇத் திருநகர் புகுந்ததும் புக்கபின் அந்தப் பொய்உரு வுடனே தக்க சமயிகள் தம்திறம் கேட்டதும் அவ்வவர் சமயத்து அறிபொருள் எல்லாம் செவ்விது அன்மையிற் சிந்தைவை யாததும் நாதன் நல்அறம் கேட்டலை விரும்பி மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னைஎன் நல்வினைப் பயன்கொல் நான்கண் டதுஎனத் தையல் கேள்நின் தாதையும் தாயும் செய்ததீ வினையில் செழுநகர் கேடுஉறத் துன்புஉற விளிந்தமை கேட்டுச் சுகதன் |