மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   149
Zoom In NormalZoom Out

அன்புகொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திற வாழ்க்கையை மாயம்என்று உணர்ந்து
தினைத்தினை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன்
புரிந்த யான்இப் பூங்கொடிப் பெயர்ப்படூஉம்
திருந்திய நல்நகர்ச் சேர்ந்தது கேளாய்
குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் முன்நாள்
துப்புஅடு செவ்வாய்த் துடிஇடை யாரொடும்
இப்பொழில் புகுந்துஆங்கு இருந்த எல்லையுள்
இலங்கா தீவத்துச் சமன்ஒளி என்னும்
சிலம்பினை எய்தி வலம்கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கருமுகில் படலத்துக் ககனத்து இயங்குவோர்
அரைசற்கு ஏது அவ்வழி நிகழ்தலின்
புரையோர் தாமும்இப் பூம்பொழில் இழிந்து
கல்தலத்து இருந்துழிக் காவலன் விரும்பி
முன்தவம் உடைமையின் முனிகளை ஏத்திப்
பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின்
அங்குஅவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ்தம்
பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு
வேத்தவை யாரொடும் ஏத்தினன் இறைஞ்சலில்
பிறப்பில் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளி